திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பொங்குபாளையத்தில் அரசு ஊழியர் நகர் என்ற மனை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த இடத்தில் முன்னாள் அரசு ஊழியர்கள் 70க்கும் மேற்பட்டோர் இடம் வாங்கியுள்ளனர். அதே போல் அப்பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரும் அங்கு வீட்டுமனை வாங்கியுள்ளார். ஆனால், முறையாக கிரயம் முடிப்பதற்குள் நிலத்தின் உரிமையாளர் இறந்துவிட்டார். இதனிடையே ஜெயக்குமார் இடம் முழுவதையும் தான் வாங்கிவிட்டதாக பொய்யான பத்திரம் தயாரித்து அரசு ஊழியர்களிடம் காண்பித்துள்ளார்.
இதையடுத்து ஜெயக்குமாருக்கும் மற்ற அரசு ஊழியருக்கும் இடையே நிலத் தகராறு ஏற்பட்டதால், 1995ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் நிலத்தை வாங்கிய 70க்கும் மேற்பட்ட முன்னாள் அரசு ஊழியர்களுக்குதான் நிலம் சொந்தம் என நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானது. ஆனால், நிலத்தை தாங்கள் கிரயம் செய்துவிட்டதாகக் கூறிய ஜெயக்குமார், முருகேசன், சுப்பிரமணி, பாஜகவைச் சேர்ந்த , சின்னசாமி உள்ளிட்ட ஐந்து பேர் நிலம் வாங்கிய மற்ற அரசு ஊழியர்களை நிலத்தின் உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர்.
எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்ற தீர்ப்பின்படி நிலத்தை உபயோகப்படுத்த தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட முன்னாள் அரசு ஊழியர்கள் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகாரளித்தனர்.
இதையும் படிங்க: ஷேர் ஆட்டோ டிரைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!