ETV Bharat / state

திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் கைது - திருப்பூர் போராட்டம்

திருப்பூர்: நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு தலைமை தபால் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

labour-union-bharat-bandh-held-in-trippur-more-than-500-arrest
திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் கைது
author img

By

Published : Jan 8, 2020, 4:48 PM IST

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் விலைவாசி உயர்ந்துள்ளதாகவும் தொழில்கள் நசிந்து விட்டதாகவும் கூறி, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

இதற்கு தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இந்நிலையில் திருப்பூரில் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. காதர் பேட்டையில் உள்ள 500க்கும் மேற்பட்ட பனியன் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் சுமார் பத்து கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் அதன் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.

திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் கைது

திருப்பூர் தலைமை தபால் நிலையம் முன்பு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சித் தொண்டர்களுடன் இணைந்து தொழிற்சங்க ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தடுக்க முயன்ற காவல் துறையினருக்கும் தொழிற்சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படியுங்க: 'பாரத் பந்த்' எதிரொலி: கேரளாவில் முழு அடைப்பு; வெறிச்சோடிய குமுளி

Intro:நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் பெரும்பாலான கடைகள் அடைப்பு 10 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு. சாலை மறியலில் ஈடுபட்ட தொழில் சங்கத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு 500க்கும் மேற்பட்டோர் கைது.Body:மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் விலைவாசி உயர்ந்து விட்டதாகவும் தொழில்கள் நசிந்து விட்டதாகவும் கூறி 12ம் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இதற்கு தமிழகத்தில் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் இன்று திருப்பூரில் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. காதர் பேட்டையில் உள்ள 500க்கும் மேற்பட்ட பனியன் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது. அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் பாத்திர உற்பத்தி பாதிக்கப்பட்டது, தொடர்ந்து திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து திருப்பூர் தலைமை தபால் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனை தடுக்க முயன்ற போலீசாருக்கும் தொழிற்சங்கத்தினர் க்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தின் காரணமாக அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.