கோயம்புத்தூர் மாவட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வருகின்ற 23ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் குறித்து திருப்பூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, "தமிழ் வணக்கம் என்ற தலைப்பில் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொள்கிறார். கொங்கு மண்டலத்தில் ராகுல் காந்தியின் வருகை எழுச்சிகரமானதாக இருக்கும். கோயம்புத்தூரில் தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.
திருப்பூரில் புதிய தொழிற்கொள்கையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கேட்கிறார். புதுச்சேரியில் கூட்டணிக்குள் எது நடந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை.
மதசார்பின்மையில் நம்பிக்கை உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் எங்களோடு கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். ரஜினிகாந்த் ரசிகர்களின் ஆதரவு எப்போதும் காங்கிரஸிற்கு உண்டு" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: யானைப் பசிக்கு சோளப் பொரியா? மழையால் பாதிக்கப்பட்ட ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் இழப்பீடு வழங்க கே எஸ் அழகிரி வலியுறுத்தல்!