கரோனா வைரஸ் பரவலை தவிர்க்கும் வகையில் கடந்த ஆறு மாத காலமாக கால்நடை சந்தைகள் திறக்கப்படாமல் இருந்தன.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கம் சார்பாக தனியார் இடத்தில் கால்நடை சந்தை இன்று (அக். 12) முதல் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், “ஆறு மாதத்திற்கும் மேலாக கால்நடை சந்தை இயங்காததால் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வாங்குவதிலும், விற்பதிலும் உள்ள சிரமத்தை போக்கும் வகையில் தனியார் சார்பாக இந்த சந்தை தொடங்கப்பட்டுள்ளது, இனி வாரந்தோறும் திங்கள்கிழமை காலை 7 மணி முதல் 12 மணி வரை நடைபெறும்” என கால்நடை சந்தை நிர்வாகிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், கரோனா வைரஸ் பரவல் தவிர்க்கும் வகையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளான உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பின்பே சந்தைக்குள் பொதுமக்கள் விவசாயிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கால்நடைகளுக்கு தேவையான இதரப் பொருள்கள் இந்தச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க...சூரப்பாவின் வலையில் தமிழக அரசு விழுந்துவிடக்கூடாது: வேல்முருகன் எச்சரிக்கை