திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, குடிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறைகாற்றால் அப்பகுதியில் உள்ள ஒரு விவசாயியின் தோட்டத்தில் உள்ள தென்னை மரம் அடியோடு சாய்ந்து அருகிலிருந்த காற்றாழையிலிருந்து மின்சாரம் கொண்டு செல்லும் மின்கம்பிகள் மீது விழுந்ததுள்ளது.
இதனால் அப்பகுதியில் தற்போது மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. மேலும் தென்னை மரங்களுக்கு கீழே இருந்த வாழை மரங்கள் ஒடிந்து நாசமானது. மின்கம்பத்தின் மீது விழுந்துள்ள தென்னை மரத்தினை அப்புறப்படுத்தி மின் இணைப்பை சரி செய்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க...முதியோர் இல்லத்தில் மூதாட்டிக்கு கரோனா தொற்று