திருப்பூர் பனியன் நிறுவனம் ஒன்றில் பணிக்குச் செல்லும்போது, மெலிந்த உடலுடன் சென்ற வட மாநில இளைஞன், வெளியே வரும்போது பெருத்து வந்துள்ளார். இதைப் பார்த்து சந்தேகமடைந்த பனியன் நிறுவன காவலாளியும், சூப்பர்வைசரும் அவரைச் சோதனை செய்தனர்.
பின்னர் அவரின் சட்டையை கழற்றச் சொல்லியுள்ளனர். அப்போதுதான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சட்டையை கழற்றுகையில் உள்ளே டி-சர்ட் அணிந்திருந்தார். தொடர்ந்து அந்த டி-சர்ட்டை கழற்ற அதனுள்ளேயும் டி-சர்ட்டும் இருந்துள்ளது. இப்படியே, தொடர்ச்சியாக ஒன்றன்மீது ஒன்றாக டி-சர்ட் அணிந்திருந்தார்.
அனைத்து டி-சர்ட்டுகளையும் கழற்றிய பிறகு அத்திருடன் எப்படி வந்தானோ அதே மெலிந்த தேகத்துடன் காணப்பட்டான்.
மேலும் சந்தேகமடைந்து அந்தத் திருடனின் கால்சட்டையைக் கழற்றச் சொல்லியுள்ளனர். அப்போது கால்சட்டைக்குள் டி-சர்ட்டுகள் பல கட்டு அடுக்கிவைத்தது தெரியவந்தது. மொத்தமாக உடல் முழுவதுமிருந்து 100 டி-சர்ட்டுகள் கைப்பற்றப்பட்டன.
எதற்காக அரங்கேற்றினான்?
அங்கிருந்து டி-சர்ட்டுகளைத் திருடி தனது ஊருக்கு கொண்டுபோய் விற்பனை செய்வதற்காகத் திட்டமிட்டிருந்தான். அதை அந்தத் திருடனே ஒப்புக்கொண்டான்.
பின்னர், பனியன் நிறுவனத்தினர் 'சில பல விருந்து'களை அத்திருடன் சலிக்கும்வரை படைத்து அவனது ஊருக்குச் சிறப்பாக வழியனுப்பிவைத்தனர்.
இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க...ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சி: அமெரிக்க டாலருக்கு எதிராக ரூ. 74.44 ஆக வர்த்தகம்.