சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும்19ஆம் தேதி நடப்பதையொட்டி, அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, அதிமுக கட்சி சார்பில் சூலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று, சூலூர் தொகுதிக்குட்பட்ட ஜல்லிப்பட்டி பகுதியில் தனது பரப்புரைய துவங்கினார். மாலை ஐந்து மணிக்கு மேல்தான் முதலமைச்சர் பரப்புரை செய்ய வந்தார். அதுவரை கூட்டம் கலையாமல் இருக்க ஆடல் பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வாட்ச் டவர் கண்காணிப்பு:
முதலமைச்சர் பழனிசாமி மக்களவைத் தேர்தலின்போது, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு பல முறை வந்துள்ளார். அப்போது, முதலமைச்சருக்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆனால், இன்று ஜல்லிப்பட்டியில் நடந்த பரப்புரையில் வாட்ச் டவர் அமைத்து காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். இதுபோன்ற கண்காணிப்பு பணிகள் மக்களவைத் தேர்தலின்போது கூட மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.