திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொங்கூர் கிராமம் உள்ளது. இப்பகுதியின் விவசாய நிலங்களில் இருந்து செங்கல் சூலைக்கு செம்மண் கடத்தப்படுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் தாராபுரம் சார்- ஆட்சியர் உத்தரவின்பேரில் வட்டாட்சியர் அறிவுதலின்படி வருவாய்த் துறை ஆய்வாளர்கள் மகேந்திர வில்சன், மாய ராஜ், சித்தரஉத்தன் பாளையம் கிராம நிர்வாக அலுவலர் சிவசாமி ஆகியோர் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது கொங்கு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக லாரிகளில் செம்மண் கடத்திவந்த ஆறு பேரையும், அவர்களது லாரியையும் அலுவலர்கள் பறிமுதல்செய்தனர்.
பிடிக்கப்பட்ட ஆறு லாரிகள் தாராபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதாமணி தலைமையிலான காவல் துறையினர் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஆறு நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூரில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக விவசாய நிலங்களில் இருந்து செம்மண் கடத்தப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க: தாமிரபரணி ஆற்று மணல் கடத்தல் விவகாரத்தில் காவல்துறை விசாரணை திருப்தி இல்லை - நீதிபதிகள் அதிருப்தி