ETV Bharat / state

திருப்பூரில் சுதந்திர தின நாளில் சட்டவிரோத மது விற்பனை! - இலவச சைடிஷ்

திருப்பூரில் சுதந்திர தின விழா நாளான இன்று (ஆகஸ்ட் 15) டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மறைமுகமாக இலவச சைடிஷ் உடன் மது விற்பனை நடைபெறுகிறது என பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

liquor
சுதந்திர தின நாளில் குடிமகன்களை குஷிப்படுத்திய மது விற்பனை
author img

By

Published : Aug 15, 2023, 2:30 PM IST

சுதந்திர தின நாளில் சட்டவிரோத மது விற்பனை

திருப்பூர்: இந்திய நாட்டின் 77வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு விடுமுறை நாளான இன்று அனைத்து அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு மாநகர பகுதிகளில் உள்ள மதுபானக் கூடங்களில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருவதாக தினசரி புகார்கள் எழுந்து வருகின்றன. மேலும், சுதந்திர தினமான இன்று, தமிழ்நாடு அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளித்துள்ள நிலையில், திருப்பூர் மாநகரில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளிலும் இன்று கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுகிறது.

திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள 1985 எண் கொண்ட மதுபானக் கடையின் பார், பின்னி காம்பவுண்டில் உள்ள 1951 எண் கொண்ட மதுபானக் கடையின் பார் மற்றும் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள 1990ம் எண் கொண்ட மதுபானக் கடையின் பார் ஆகிய இடங்களிலும் மது விற்பனை கனஜோராக நடைபெற்று வருகிறது. இந்த வியாபாரத்திற்கு மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு திருப்பூர் போலீசார் மறைமுக அனுமதி வழங்கியிருப்பதும் தெரிய வருகிறது.

இதனால் மதுபானக் கடை பார்களில் இலவசமாக டம்ளர் மற்றும் சைடிஷ் ஆக மிக்சர், முறுக்கு, பொரிக்கடலை மற்றும் ஃப்ரூட்ஸ் ஆகியவையும் வழங்கப்படுகிறது. இதனால் மதுப்பிரியர்கள் பார்களில் கூடி குதூகலித்த நிலையை பார்த்து பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், சாதாரண நாட்களில் கூட சைடிஷ், டம்ளர் எல்லாம் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் சுதந்திர தின நாளான இன்று வகை வகையான இலவச சைடிஷ், டம்ளர், தண்ணீர் என்று கொடுத்தது மதுப்பிரியர்களை குஷிப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,“சுதந்திர தினம் மற்றும் அரசு விடுமுறை நாளான இன்று மது விற்பனை செய்வது தவறு என்றும், அதற்கு காவல்துறை மறைமுகமாக அனுமதி வழங்கியிருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது எனவும், உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மது விற்பனை செய்வோரை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்” என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சுதந்திர தினம் 2023: முதலமைச்சர் ஸ்டாலின் சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.