ETV Bharat / state

கணவன் இறந்த துக்கம் தாளாமல் மனைவி உள்பட மூவர் தற்கொலை

திருப்பூர்: முதலிபாளையம் அருகே கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவி, அவரது மகன், மகள் ஆகிய மூவர் தற்கொலையில் உயிரிழந்தனர்.

suicide
suicide
author img

By

Published : Apr 9, 2021, 1:49 PM IST

திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் ராகவன் (50). இவரது மனைவி செல்வி (47). இந்தத் தம்பதியின் மகன் அஸ்வின் (19), மகள் அகல்யா (17). இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி ராகவன் இறந்துவிட்டார்.

ராகவன்
இறந்துபோன ராகவன்

இதனால் மீனாட்சி, அஸ்வின், அகல்யா ஆகிய மூன்று பேரும் மனமுடைந்த நிலையில் இருந்தனர். இதனிடையே, நேற்றிரவு (ஏப்ரல் 8) மீனாட்சி தனது தங்கை மகாலட்சுமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தன் கணவர் இறந்துவிட்டதால் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் இங்கு வாழ பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இது குறித்து மகாலட்சுமி கொடுத்த தகவல் தகவலின் அடிப்படையில் ஊத்துக்குளி காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

அங்கு வீடு பூட்டியிருந்ததால் காவல் துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மீனாட்சி, அஸ்வின், அகல்யா மூவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

suicide
தற்கொலை செய்துகொண்ட ராகவன் குடும்பம்

இதனையடுத்து மூவரின் சடலத்தைக் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மகலாட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.