திருப்பூர் மாவட்டத்தில் இன்று (அக்.23) செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் வழக்குரைஞர் கோபிநாத் கூறுகையில், " விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது சுய விளம்பரத்திற்காக தொடர்ந்து இந்து பெண்களை அவதூறாக பேசி வருகிறார்.
திருமாவளவனின் இத்தகைய செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அரசு பதிக்க வேண்டும், இல்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் இந்து முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.