ETV Bharat / state

இந்து மக்கள் கட்சி நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு - thirppur latest news

திருப்பூர்: கணக்கம்பாளையம் அருகே இந்து மக்கள் கட்சி நிர்வாகியை ஏழு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

thirppur
thirppur
author img

By

Published : Mar 18, 2020, 12:28 PM IST

திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையமத்தில் வசித்து வரும் பகவான் நந்து (50) என்பவர், இந்து மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட துணைத்தலைவராக உள்ளார். அதேபகுதியில், எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ள இவர், நேற்றிரவு வழக்கம் போல் கடையைப் பூட்டிவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். செல்லும் வழியில் ஒருவர் அவரை கூப்பிடவே, நந்து வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

திருப்பூர் அரசு மருத்துவமனை

அதன்பின் திடீரென அங்குவந்த ஏழு பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் வெட்டத்தொடங்கியுள்ளது. வலியில் அவர் கூச்சலிடவே, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. வெட்டுபட்ட அவரை, அருகிலிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த பெருமாநல்லூர் காவல் துறையினர், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இந்து முன்னணி, பாஜக இடையே மோதல் - 3 பேருக்கு அரிவாள் வெட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.