மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விவசாய நிலங்கள் வழியே மின் கோபுரம் அமைத்துக் கொண்டு செல்ல தமிழ்நாட்டு அரசு அனுமதி அளித்தது.
அதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பவர் கிரிட் நிறுவனம் சார்பில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதற்காக அரசு கொடுப்பதாக ஒப்புக்கொண்ட இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக உயர்மின் கோபுரம் அமைப்பதால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என உறுதி அளித்திருந்த நிலையில், தற்போது நிர்வாகம் இழப்பீடு வழங்காமல் பணியை மேற்கொண்டுவருகின்றனர்.
இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் இன்று மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்..
இதையும் படிங்க: மின் இணைப்பு வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு குடும்பத்துடன் தர்ணா