கொங்கு மண்டல மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கையான அத்திகடவு அவினாசி திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மாதம் 28 ஆம் தேதி அவிநாசியில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பரம்பிக்குளம், ஆழியாறு மற்றும் கீழ்பவானி பாசன திட்டத்திலும் சிவன்மலை, படியூர், கணபதி பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் இணைக்கபடாமல் இருப்பதால் நிலத்தடி நீரையே சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் மக்கள் கோவையிலிருந்து திருப்பூர் வழியாக ஈரோட்டில் நிறைவடையும் அத்திக்கடவு அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தில் தங்களது பகுதி கிராமங்களையும் இணைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளிக்க சென்றனா்.
ஆனால் தேர்தல் நடைமுறைகள் காரணமாக குறைதீர்க்கூட்டம் நடைபெறததால் அங்குள்ள புகார் பெட்டியில் தங்கள் மனுவினை போட்டு சென்றனர் .