திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இரண்டாம் நாளான இன்று (டிச.9) விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் தாராபுரம் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் காளிமுத்து, தமிழ்நாடு விவசாய பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன், மாவட்ட உப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஆர். அர்ஜுன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ஒன்றரை லட்சம் ரூபாய் பப்பாளி பழங்கள் அழுகி நாசம் - விவசாயி வேதனை