திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேவுள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து பிஏபி பிரதான வாய்க்கால் மூலம் தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் சங்கத்தினர் டிசம்பர் 8ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக 12ஆவது நாளான இன்றும் (டிச.19) தோப்புக்கரணம் போடும் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டனர். அப்போது பொதுப்பணித்துறை, தண்ணீர் திருட்டில் ஈடுபட்டு வரும் கோழி பண்ணை முதலாளிகள், சாயப்பட்டறை உரிமையாளர்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - மனிதநேய ஜனநாயக கட்சியினர் கைது