அதில், 'மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தென்மேற்குப் பருவமழை நல்ல முறையில் பெய்ததால், பிஏபி நீர்பிடிப்புப் பகுதிகளில் உள்ள சோலையாறு, பரம்பிக்குளம் போன்ற அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், திருமூர்த்தி அணையில் 900 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் பிஏபி 2ஆம் மண்டலத்திற்கு செப்டம்பர் முதல் வாரம் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், அதற்கு முன்னதாக உப்பாறு அணைக்கு அரசூர் வழியாக தண்ணீர் திறந்து விட வேண்டும்' என்று தமிழ்நாடு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
மேலும் அவினாசி திட்டம் போன்று உப்பாறு அணைக்கு அரசூர் மதகில் இருந்து குழாய் மூலம் நீரை எடுத்து, உப்பாறு அணை நிரம்பினால் உபரி நீர் வீணாகாமல் தடுக்கப்படுவதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேம்படும். எனவே, மாவட்ட ஆட்சியர் இதனை தமிழ்நாடு முதலமைச்சருக்கு வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன்வைத்தனர்' இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: ’ஊராட்சி மன்றத் தலைவர் உயிருக்கே பாதுகாப்பு இல்லையா?' - ஸ்டாலின் கண்டனம்