திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காட்டூர் பகுதியில் விவசாய நிலங்களில் கஞ்சா விளைவிப்பதாக காமநாயக்கன்பாளையம் காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் அப்பகுதியில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கோவிந்தராஜ் என்பவரின் மக்காச்சோளக்காட்டில் கஞ்சா பயிரிட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை காவல்துறையினர் அழித்தனர். மேலும், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், கோவிந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நெய்வேலியில் கந்துவட்டி கொடுமை- என்எல்சி தொழிலாளி தற்கொலை