ஈரோடு மாவட்டம் பாவனியிலிருந்து மேட்டூர் செல்லும் சாலையில் மூன்று ரோடு சந்திப்பு உள்ளது. இப்பகுதியில் இன்று காலை நபர் ஒருவர் தன்னை காவலர் என்று கூறி அடையாள அட்டையை காண்பித்து அப்பகுதியில் சென்ற இருசக்கர வாகனஓட்டிகள், அப்பகுதி சிறு கடை வியாபாரிகள் ஆகியோரிடம் மாமூல் கேட்டுள்ளார்.
அந்த நபர் மீது சந்தேகம் அடைந்த பொதுமக்கள் விசாரிக்க முயன்ற போது அங்கே இருந்து தப்பிச்சென்ற நபரை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்
பின்னர், இதுகுறித்து பவானி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த நபரை காவல்நிலையம் அழைத்து சென்று உரிய விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பதும் ஊர்காவல்படையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
மேலும் அவர் கடந்த 10 நாள்களாக மேட்டூரில் இருந்து பவானி வரும் சாலையில் வாகன ஓட்டிகளிடமும், பொதுமக்களிடமும் காவலர் என்ற போலியான அடையாள அட்டையை காட்டி பணம் வசூல் செய்து வந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அவரை பவானி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: