ETV Bharat / state

திருப்பூரில் தேர்தல் ஆயத்தப்பணிகள் தீவிரம் - நாடாளுமன்றம்

திருப்பூர்: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளை ஆயத்தப்படுத்தும் பணிகள் இன்று தொடங்கி துரிதமாக நடைபெற்று வருகிறது.

தேர்தலுக்கு தயாராகும் திருப்பூர் மாவட்டம்
author img

By

Published : Apr 9, 2019, 4:49 PM IST

நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் வாக்கு பதிவுக்கான ஆயத்தப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

தேர்தலுக்கு தயாராகும் திருப்பூர் மாவட்டம்

வாக்காளர்கள் ஒப்புகை சீட்டு இயந்திரம் முதல்முறையாக இந்தத் தேர்தலில் பயன்படுத்தவுள்ள நிலையில் திருப்பூரில் இன்று அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கின. இந்நிலையில் 9 மணிக்கு பணி துவங்கப்பட்டபோதும் 12 மணிக்குதான் முதல் இயந்திரம் பொருத்தப்பட்டதால், பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதனிடையே திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது சின்னங்களை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணியும் இன்று துவங்கியது.

இயந்திரங்கள் பொருத்தும் பணிகளை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பழனிசாமி, இயந்திரங்களை வகைப்படுத்தி பிரிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதுடன் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார். இன்று மாலைக்குள் பணிகள் முடிக்கப்பட வேண்டிய நிலையில் நாளையும் இயந்திரங்கள் தயார்படுத்தும் பணி தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூரில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் சின்னம் பொருத்தும் பணி துவங்கியது.  வாக்களர்கள் ஒப்புகை சீட்டு இயந்திரமும் முதல் முறையாக பயன்படுத்த தயார்செய்யப்பட்டு வருகிறது.9 மணிக்கு துவங்கப்பட்ட நிலையில் 12 மணிக்கே முதல் இயந்திரம் பொருத்தப்பட்டதால்  பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுரை.

திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது சின்னங்களை மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி இன்று காலை 9 மணிக்கு துவங்கியது. முதற்கட்டமாக திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் குழுவுக்கு 4 பேர் வீதம் 60 குழுக்கள் மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் திருப்பூர் வடக்கு தொகுதியில் உள்ள 362 வாக்குசாவடிகளுக்கு 20 சதவீத கூடுதல் இயந்திரங்களுடன் 434 இயந்திரங்களும், திருப்பூர் தெற்கு தொகுதியில் உள்ள 233 வாக்கு சாவடிகளுக்கு 44 கூடுதல் இயந்திரங்களுடன் 279 இயந்திரங்களும் வேட்பாளர் பெயர் மற்றும் அவர்களது சின்னம் பொருத்தப்பட்டு தயார்படுத்தும் பணிகள் அனைத்து கட்சி வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் துவங்கியது. இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், நினைவகம், ஒப்புகை சீட்டு இயந்திரங்களை வகைப்படுத்தி பிரிப்பதில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக 9 மணிக்கு துவங்கப்பட்ட பணி பகல்  12 மணிக்கே முதல் வாக்குபதிவு இயந்திரம் பொருத்தப்பட்டது. இயந்திரங்கள் பொருத்தும் பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பழனிசாமி இயந்திரங்களை வகைப்படுத்தி பிரிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதுடன் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுரை வழங்கினார். இன்று மாலைக்குள் பணிகள் முடிக்கப்பட வேண்டிய நிலையில் நாளையும் இயந்திரங்கள் தயார்படுத்தும் பணி தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.