கேரள மாநிலம் மறையூர், காந்தலூர் பகுதியிலிருந்து இரவு நேரங்களில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து விளைநிலங்களில் விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை உள்ளிட்ட பல பயிர்களை சேதப்படுத்தி கொண்டு இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் விவசாய பயிர்களை உண்பதற்காக யானை கூட்டம் வந்த போது சாலையில் வந்து கொண்டிருந்த ஆட்டோவை வழிமறித்து சேதப்படுத்தின. யானைகளை கண்டதும் ஆட்டேவில் பயணித்த இருவர் தப்பியோடினர்.
இதற்கிடையே காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து தினந்தோறும் பயிர்களை சேதப்படுத்தி வருவதால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுவதோடு உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் வனத்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு யானைகளை வனத்துக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்