ETV Bharat / state

தைரியம் இருந்தால் எனது வீட்டில் சோதனை நடத்துங்க... உதயநிதி ஸ்டாலின் சவால்! - அமித்ஷா தமிழ்நாடு வருகை

திருப்பூர்: தைரியமிருந்தால் எனது சகோதரி வீட்டில் சோதனை நடத்தும் வருமானவரித்துறையினர் என் வீட்டிற்கு வந்து சோதனை நடத்துங்கள் என உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

Dmk
Dmk
author img

By

Published : Apr 2, 2021, 10:49 PM IST

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முக்கோணம் பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன், உடுமலை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் தென்னரசு ஆகியோரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது, உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "தாராபுரத்திற்கு வந்த மோடி நான் குறுக்கு வழியில் வந்தவர் என்றார். அதேபோல் அமித்ஷாவும் உதயநிதி வளர்ச்சி முக்கியமா? தமிழ்நாடு வளர்ச்சி முக்கியமா? என கேள்வியெழுப்பினார். இப்போது சொல்கிறேன், என் வளர்ச்சியை விட தமிழ்நாடு வளர்ச்சி தான் முக்கியம். அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் சொத்து மதிப்பு ரூ.120 கோடியாக உயர்ந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை

உங்கள் உருட்டல் மிரட்டலுக்குப் பயப்படமாட்டேன். என் சகோதரி வீட்டில் வருமான வரித்துறையினரை அனுப்பி சோதனையிட்டு என்னை மிரட்டப் பார்கிறீர்கள். தைரியம் இருந்தால் சென்னையில் இருக்கும் என் வீட்டிற்கு வந்து சோதனையிடுங்கள். மோடிக்கு உதயநதி மட்டுமல்ல இங்கு உள்ள கிளைச் செயலாளர்களும் பயப்படமாட்டார்கள்" என்றார்.

இதையும் படிங்க: குறுக்கு வழியில் பிரதமரான மோடி என்னை குறை கூறுவதா? - உதயநிதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.