கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்கள் தொழிலாளர்களைக் காக்கும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தை தொடங்கி இதன் மூலம் மக்களுக்கு உதவும் வகையில் தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் 12,535 மனுக்கள் பெறப்பட்டு இதில் மாவட்டம் முழுவதும் திமுகவினரால் 9,073 பேருக்கு நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை அளித்த நிலையில் அரசால் மட்டும் நிறைவேற்றக்கூடிய ரேஷன் பொருள்கள் பிரச்னை, மருத்துவ வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மூன்று ஆயிரத்து 462 மனுக்களை இன்று (மே 12) மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டது.
திருப்பூரில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் இதுவரை ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் 3 ஆயிரத்து 630 பேருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், வலியுறுத்தி வடக்கு, தெற்கு மாவட்ட திமுக செயலாளர்கள், உடுமலைப்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் இன்று (மே 12) திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் விஜயகார்த்திகேயனிடம் கோரிக்கை மனுவினை வழங்கினார்.
அதேபோல், கோவை மாவட்ட மக்களின் சார்பாக 4,102 விண்ணப்பங்களை கோவை சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
இதையும் படிங்க: பாலியல் தொழிலாளிகளுக்கு நிதியுதவி கோரிய மனு தள்ளுபடி