தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி திமுக, அதிமுக, மநீம உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. திமுகவை பொருத்தவரையில், திமுக தலைவர் ஸ்டாலின், எம்.பி. கனிமொழி ஆகியோர் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பரப்புரை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் பரப்புரை செய்யும் கனிமொழி திருப்பூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் முன்பு பேசிய அவர், "தமிழ்நாட்டில் சுகாதார நிலையங்கள் முறையாக செயல்படவில்லை. தன்னை தக்கவைத்துக் கொள்ள தமிழர்களின் அடையாளத்தை முதலமைச்சர் பழனிசாமி பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார்.
வெற்றிநடை போடும் தமிழகம் என்று கூறிவிட்டு முதலமைச்சர் மட்டுமே வெற்றிநடை போடுகிறார். தமிழ்நாடு வெற்றி நடை போடவில்லை. ரேஷன் கடைகள் நியாய விலை கடைகளாக நடக்க வேண்டும். ஆனால், அங்கு நியாயம் இருப்பதாக தெரியவில்லை" என்று குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: மதுரை அரசு இராசாசி மருத்துவமனை சிகிச்சை குறித்து நீதிமன்றம் கேள்வி?