ETV Bharat / state

தாராபுரம் வேட்பாளரை ஆதரித்து கனிமொழி பரப்புரை: பேசிக்கொண்டிருக்கும் போதே கலைந்த கூட்டம்! - தாராபுரம் வேட்பாளரை ஆதரித்து கனிமொழி பரப்புரை

திருப்பூர்: தாராபுரம் தனி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கயல்விழியை ஆதரித்து கனிமொழி பரப்புரை செய்துக் கொண்டிருந்தபோது, கூட்டம் கலைந்து சென்றது.

தாராபுரம் வேட்பாளரை ஆதரித்து கனிமொழி பரப்புரை: பேசிக்கொண்டிருக்கும் போதே கலைந்த கூட்டம்!

author img

By

Published : Mar 20, 2021, 4:55 PM IST

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குண்டத்தில் காவல் நிலையம் அருகே தாராபுரம் தனி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கயல்விழியை ஆதரித்து மக்களவை உறுப்பினர் ள முக கனிமொழி திறந்த வாகனத்தில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய கனிமொழி, “பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும், நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் முதியோர்களுக்கு 1500ஆக வழங்கப்படும், 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் திமுக ஆட்சிக்கு வந்தால் 150 நாட்களாக வழங்கப்படும். அதற்கான சம்பளமாக 300 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

கிராமப்புற மகளிர்கள் நகரத்திற்குச் செல்ல இலவச பேருந்து, 3 லட்சம் அரசு வேலைகள் உடனடியாக வழங்கப்படும், ஒவ்வொரு சிலிண்டருக்கும் 100 ரூபாய் மானியம் வழங்கப்படும், பால் விலை குறைக்கப்படும்” என்றார்.

மேலும், “குண்டடம் ஒன்றியத்தில் காய்கறி மார்க்கெட் அமைக்கப்படும், ஆனைமலை நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டின் ஆட்சி, தமிழ் நாட்டில் நடத்தப்படவேண்டும், டெல்லியிலிருந்து நடத்தக்கூடாது. ஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் தமிழ்நாட்டின் ஆட்சி தமிழ் நாட்டில் தான் நடக்கும்” எனப் பேசினார்.

தாராபுரம் வேட்பாளரை ஆதரித்து கனிமொழி பரப்புரை: பேசிக்கொண்டிருக்கும் போதே கலைந்த கூட்டம்!

கனிமொழி பேசிக்கொண்டிருக்கையில் தொண்டர்கள் அவரின் பேச்சைக் கேட்காமல் சாரைசாரையாக நடந்து சென்றனர். இதைப்பார்த்த கனிமொழி சற்று அதிர்ச்சி அடைந்து தனது குரலை உயர்த்திப் பேசினார்.

மேலும் திமுக குண்டடம் பொறுப்பாளர்கள் கனிமொழி பேசிக்கொண்டிருக்கையில் குச்சி ஐஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இதனால் தொண்டர்கள் மத்தியில் சிறிது கவனச் சிதறல் ஏற்பட்டது. மேலும் தாராபுரம் கோவை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க...இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இட ஒதுக்கீடு தொடரும் - உச்ச நீதிமன்றம் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.