தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முப்பெரும் விழா திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள திடலில் நேற்று நடைபெற்றது.
இதில், கலந்துகொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கி பின் உரையாற்றினார்.
அப்போது, "ஒரு நாள் ஒரு பொழுதாவது உங்கள் விஜயகாந்துக்கு விடியும். அப்பொழுது நான் உங்களைத் தங்கத்தட்டில் வைத்து தாலாட்டுவேன் " என்றார் நம்பிக்கையுடன்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜயகாந்த் இப்படி பேசுவதைக் கேட்ட தேமுதிக தொண்டர்கள் உற்சாகத்தில் ஆராவாரம் செய்தனர்.