திருப்பூர் அடுத்த பெரியார் காலனி பகுதியில் உள்ள நீச்சல் பயிற்சி பள்ளியில், பள்ளிக்கல்வித் துறை, மாவட்ட நீச்சல் சங்கம் சார்பில் பள்ளிகளுக்கிடையேயான நீச்சல் போட்டி நடைபெற்றது.
பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டியில், மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, போட்டியில் வெற்றி பெற்ற மணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டது. இதனிடையே நடைபெற்ற ஒட்டு மொத்த போட்டிகளிலும் முதல், இரண்டு இடங்களை பிடித்த மாணவ - மாணவிகள் அடுத்த மாதம் சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாநில நீச்சல் போட்டிகள் - அண்ணா பல்கலைக்கழகம் சாம்பியன்