கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் திருப்பூரில் தங்கியிருந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் வேலையிழந்து சிரமப்பட்டுவந்தனர். தற்போது அவர்களது விருப்பத்தின்பேரில் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இன்று பிகார், அஸ்ஸாம், உத்தரப் பிரதேச மாநிலங்களுக்குச் செல்ல மூன்று சிறப்பு ரயில்கள் திருப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் நான்காயிரத்து 800 பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். இவர்களுக்கான உணவு, தண்ணீர் ஆகியவை மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. குறிப்பாக உடல் வெப்பநிலை கணக்கிடப்பட்ட பின்னரே ஊருக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: நளினி முருகனை பேச அனுமதிக்க முடியாது - தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!