திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுத்த வடகஞ்சி பகுதியில் உள்ள தனியார் டீ எஸ்டேட் ஒன்றில், திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ்(40), அவரது மனைவி மேகலா(35), மகன் விக்னேஷ், மேகலாவின் தம்பி மாணிக்கம்(30) ஆகியோர் வேலை செய்து வந்தனர். தற்போது கரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் வேலையின்றி தவிந்துவந்தனர்.
அதனால் அவர்கள் சொந்த ஊருக்கு 150 கிலோ மீட்டர் நடந்துச் செல்ல முடிவெடுத்து, அங்கிருந்து மணச்சநல்லூர் நோக்கி கிளம்பினர். தாராபுரம் பேருந்து நிலையம் வழியாக சென்றுக்கொண்டிருந்த போது, அவர்களை பார்த்த வட்டாட்சியர் கனகராஜன் விசாரணை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து அவர், இதுகுறித்து தாராபுரம் சார் ஆட்சியர் பவன்குமாருக்கு தகவல் அளித்தார். அதையடுத்து சார் ஆட்சியர் பவன்குமார் அவர்கள் நான்கு பேரையும் கார் மூலம் மணச்சநல்லூருக்கு அனுப்பி வைத்தார்.
இதையும் படிங்க: நடந்து வந்த கூலித் தொழிலாளர்கள்: சொந்த ஊர் செல்ல உதவிய காவல் துறை