திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள துங்காவியில், திருப்பூர் மாவட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் பாசறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனோ இடர் கால நிவாரணப் பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிமுக தேர்தல் பிரிவு செயலரும், சட்டப்பேரவை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள், ஆடைகள் ஆகியவற்றை வழங்கினார்.
அதன்பின் அவர் செய்தியாளர்களிடன் பேசுகையில், ''மு.க.ஸ்டாலின், சொந்த புத்தி இல்லாமல் சொல்புத்தியை வட இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறார். இது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் எடுபடாது.வரும் தேர்தலில் அதிமுகவின் பத்தாண்டு கால சாதனைகளான பல்வேறு வளர்ச்சிப் பணிகள், சாலை விரிவாக்கம், குடிமராமத்துப் பணி, தாலிக்கு தங்கம் போன்ற பணிகளை முன்னிறுத்தி வாக்கு சேகரிக்க இருக்கிறோம்.
விவசாயிகளின் தேவைகளை அவர்கள் கோரிக்கைகள் வைக்காமலேயே நிறைவேற்றும் ஒரு எளிமையான முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அவருக்கு மக்கள் ஆதரவு தருவார்கள்'' என்றார்.
இதையும் படிங்க: பாஜகவிலிருந்து மேலும் பலர் விலகலாம் - ஏக்நாத் காட்சே தகவல்