திருப்பூர் மருதாச்சலபுரம் பகுதியில் உள்ள இறைச்சி கடை ஒன்றில் இறந்த கோழிகளை விற்பனை செய்து வருவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், அலுவலர்கள் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது, அப்பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் இறந்த கோழிகளை விற்பனை செய்து வந்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காயத்ரி, இன்பவல்லி, விஜயகுமார், ஆனந்தன் ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், இறந்த கோழிகளை நாமக்கல் மாவட்டத்திலிருந்து எடுத்துவந்து இப்பகுதியில் வைத்து அந்த நபர்கள் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.
இதையடுத்து, உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள், 150க்கும் மேற்பட்ட கோழிகளை பறிமுதல் செய்ததோடு, இறந்த கோழிகளை விற்பனை செய்து வந்த நான்கு பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதையும் படிக்க: தீபாவளியால் கோழியின் விலை உயர்வு!