ETV Bharat / state

கரோனா தொற்று: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திருப்பூரில் அதிகரிப்பு - திருப்பூர் நகர காவல்துறை

திருப்பூர்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.

Covid
Covid
author img

By

Published : Apr 17, 2020, 12:13 PM IST

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கரோனா தொற்று இந்தியாவிலும் அதிவேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் 1,267 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

திருப்பூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87ஆக உயர்ந்துள்ளது. இதனைத் தடுக்கும் வகையில் திருப்பூர் வடக்கு காவல் துறை சார்பில் கரோனா பொம்மையுடன் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விழிப்புணர்வு பேரணி

மேலும் வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வந்த பொதுமக்களிடம் நோயின் தீவிரம் குறித்து எடுத்துக் கூறி, பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் திருப்பூர் வடக்கு சரக காவல் உதவ ஆணையர் வெற்றிவேந்தன், வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின் காவல் துறையினருடன் தன்னார்வலர்களும் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இந்தப் பேரணியானது திருப்பூர் புதிய பேருந்துநிலையத்திலிருந்து தொடங்கி தற்காலிக உழவர் சந்தை வழியாக வந்து புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.