ETV Bharat / state

திருப்பூரில் கரோனா தடுப்பூசி திருவிழா: மாநகராட்சி ஆணையர் ஆய்வு!

author img

By

Published : Apr 14, 2021, 7:47 PM IST

திருப்பூர்: கரோனா தடுப்பூசி திருவிழாவையொட்டி மாவட்டம் முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கு, சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் கரோனா தடுப்பூசி திருவிழா
திருப்பூரில் கரோனா தடுப்பூசி திருவிழா

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (ஏப். 14) கரோனா தடுப்பூசி திருவிழா, மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், நடமாடும் மருத்துவக் குழு, சுகாதார மையங்கள், மினி கிளினிக்குகளில் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூரில் கரோனா தடுப்பூசி திருவிழா

இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் தெரிவிக்கையில்,

"தற்போது நாளொன்றுக்கு ஐந்தாயிரம் நபர்களுக்கு ஒரு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், வரும் காலங்களில் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்

முன்னதாக முன் களப்பணியாளர்கள், மருத்துவர்கள், காவல் துறையினர், அரசு அலுவலர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தியதையடுத்து, தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கு, மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

மேலும், பொது மக்கள் யாரும் வதந்திகளை நம்பாமல், அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர். விஜயகார்த்திகேயன் கேட்டுக்கொண்டார்.

தடுப்பூசி செலுத்த வந்தவர்களிடம் அவர்களது உடல்நிலை குறித்து விசாரித்து இரண்டாவது தடுப்பூசியும் மறக்காமல் போட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வில் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் சிவகுமார், மாவட்ட சுகாதாரப் பணி இணை இயக்குனர் டாக்டர். ஜெகதீஷ் குமார், சுகாதாரத் துறையினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.