திருப்பூர் மாநகராட்சிக்குள்பட்ட முத்து நகர் இரண்டாவது பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் சென்னையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் நேற்று (ஜூன் 17) கோவை மார்க்கமாக திருப்பூர் வந்துள்ளனர். கோவை விமான நிலையத்தில் அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களது பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் அந்த வீட்டில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதால், அவர் சுகாதாரத் துறையின் சார்பில் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் அவர் தங்கியிருந்த பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
அதேபோல் அவருடன் வந்த அவரது கணவர், குழந்தைக்கு முதல்கட்ட சோதனையில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 2,174 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி!