தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவிவருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 406 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் திருப்பூரை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சி, வாஷிங்டன் நகரிலுள்ள, ஒரு பனியன் நிறுவனத்தில் பணியாற்றிவரும் தொழிலாளி ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
அவரைப் பரிசோதனை செய்தபோது அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சுகாதாரத் துறை சார்பில் அந்நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 31 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த பனியன் நிறுவனத்தை மூன்று நாள்கள் மூட சுகாதாரத் துறையினர் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கனிமொழிக்கு கரோனா உறுதி