திருப்பூரில் மருத்துவக்கல்லூரி அமையவுள்ள இடத்தில் வருகிற 15ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் அதன் அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது. இதற்கான கால்கோள் விழா இன்று மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "14.80 ஏக்கர் பரப்பளவில் சுமார் 336 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ்க்கு கோழிக்கறி காரணம் எனத் தவறான வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்பது சுகாதாரத்துறை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அதனை நம்ப வேண்டாம்" என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: ஆறு காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்!