ETV Bharat / state

திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரகப் போராட்டம்! - The struggle of the Congress parties

திருப்பூர்: உத்தரப் பிரதேசத்தில் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்குச் சென்ற ராகுல்காந்தியையும், பிரியங்கா காந்தியையும் காவல் துறை தாக்கியதை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரகப் போராட்டம்

author img

By

Published : Oct 6, 2020, 10:12 PM IST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதுடன், கொடூரமாகத் தாக்கப்பட்டார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அப்பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதற்காகச் சென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ராகுல்காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோரை உத்தரப் பிரதேச காவல் துறையினர் தாக்கி அவமானப்படுத்தினர்.

எனவே காவல்துறையின் இச்செயலால் அவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும், உத்தரப் பிரதேச அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், உயிரிழந்த அப்பெண்ணின் சம்பவத்திற்கு பொறுப்பேற்பதோடு, உத்தரப் பிரதேச பாரதிய ஜனதா கட்சியில் இருந்து பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி எதிரே காங்கிரஸ் கட்சி சார்பாக இன்று (அக்.06) சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க: ஹத்ராஸில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.