ETV Bharat / state

எங்களைச் சொந்த ஊருக்கு அனுப்புங்க - மாறி, மாறி தாக்கிக் கொண்ட வட மாநில தொழிலார்கள்!

திருப்பூர்: சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி, தனியார் பனியன் நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

fight
fight
author img

By

Published : May 10, 2020, 8:10 PM IST

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல அனுமதியளித்து மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, திருப்பூரில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கணக்கெடுக்கும் பணி நடந்துவருகிறது.

தொழிலாளர்களின் சொந்த ஊரின் மாநில அரசு அனுமதியளித்த பின்னர், சிறப்பு ரயிலில் அனுப்பி வைக்கப்படுவார்கள். அதுவரை அவர்கள் தற்போது தங்க வைக்கப்பட்டிருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஒரு சிலர் தாங்களாகவே வாகனம் ஏற்பாடு செய்து கொண்டு செல்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பாஸ் வழங்கி வருகிறது.

இரு தரப்பினர் இடையே மோதல்!

இந்நிலையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி, கடந்த இரண்டு நாட்களாக சில இடங்களில் போராட்டம் நடத்தினர். அவர்களையும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், ஊத்துக்குளி அருகே தளவாய்பாளையம் பகுதியில் உள்ள அகில் என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான பனியன் கம்பெனி விடுதியில், 600க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.

பணிக்கு திரும்பினால், தங்களுக்கு கரோனா தொற்றிக் கொள்ளும் என்ற அச்சத்தில், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். இந்தநிலையில், பனியன் நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் வடமாநில தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதில், இருதரப்பினருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இருதரப்பினரும் தடிகளைக் கொண்டு மாறி, மாறி தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர், உடலில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் பேசுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து அப்பகுதியில் மேலும் மோதல் ஏற்படாவண்ணம் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆதரவற்ற குழந்தைகளின் தாய் திருநங்கை நூரி சலீம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.