திருப்பூர் மாவட்டத்திற்குள்பட்ட கேவிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி அம்மாள். இவர் தனது மகள் கவிதா உடன் வசித்துவருகிறார்.
இவர்கள் குடும்ப செலவுக்காக அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரிடம் ஒன்றரை லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். தற்போது வாங்கிய பணத்திற்கு மேல் 20 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என பரமசிவம் அடியாள்களுடன் சென்று கணபதி அம்மாளிடம் மிரட்டியுள்ளார்.
அத்தொகையை அவர் கட்டமுடியாமல் போனதால் கணபதி அம்மாள் வீடு, கடையை பரமசிவம் ஆக்கிரமித்துள்ளார். இது குறித்து கே.ஆர். நகர் மத்திய காவல் நிலையத்தில் கணபதி அம்மாள் மூன்று முறை புகார் அளித்துள்ளார்.
ஆனால் காவல் துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இன்று (நவ. 05) கணபதி அம்மாள் குடும்பத்தினருக்கு ஆதரவாக நாடார் மக்கள் பேரவை அமைப்பினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: திருப்பூர் தனியார் சீட்டு கம்பெனி முற்றுகை: வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாக புகார்