திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணி கட்சியான இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் சுப்பராயன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேடபாளரான எம்.எஸ்.எம். ஆனந்தனைவிட 93,368 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து நகரின் பல்வேறு பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் கூட்டணி கட்சியான திமுகவினரும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேனர்கள் வைத்தனர்.
திருப்பூர் வளம் பாலம் அருகே வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வைத்த பேனரில் திமுக மாவட்ட நிர்வாகிகள் புகைப்படம் மற்றும் பெயர்கள் இடம் பெறவில்லை
இதனால் ஆத்திரமடைந்த திமுகவினார் அந்த பேனரை கிழித்தெறிந்துள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உடனடியாக பேனரை கிழித்ததுடன் அதற்கு பதிலாக சிறிய அளவிலான பேனரை வைத்துவிட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.