திருப்பூர் மாவட்டம் ஓடக்காடு பகுதியில் அமைந்துள்ள இஎஸ்ஐ அலுவலகத்தில் திருப்பூர் தொழிலாளர்கள் சுமார் நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவுசெய்துள்ளனர்.
இந்நிலையில் இஎஸ்ஐ சேவைகள் தொடர்பான சந்தேகங்களைக் கேட்டுப் பெற இஎஸ்ஐ நிர்வாகத்தால் வழங்கப்பட்ட இலவச சேவை எண்ணுக்குத் தொடர்புகொண்டால் அதில் ஆங்கிலம், இந்தி மட்டுமே தொடர்பு மொழியாக இருப்பதாகவும், நேரில் சந்தேகங்களைக் கேட்கச் சென்றால் அங்கு தமிழ் தெரியாத இந்தி அலுவலர்கள் மட்டுமே பணியில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, சிஐடியு தொழற்சங்கத்தினர்,
- உடனடியாக சேவை தொடர்பு எண்ணில் தமிழ் மொழியைக் கொண்டுவர வேண்டும்,
- திருப்பூரில் உள்ள இஎஸ்ஐ அலுவலகததில் தமிழ் தெரிந்த அலுவலர்களை நியமிக்க வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இஎஸ்ஐ அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.