ETV Bharat / state

'தோல்வி பயத்தினால் முதலமைச்சர் 2ஜி வழக்கு குறித்து பேசிவருகிறார்'- கனிமொழி குற்றச்சாட்டு - poitical latest news in tamil

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற பயத்தினால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 ஜி வழக்கு குறித்து பேசிவருகிறார் என தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

Dmk mp kanimozhi
'தோல்வி பயத்தினால் முதலமைச்சர் 2ஜி வழக்கு குறித்து பேசிவருகிறார்'- கனிமொழி குற்றச்சாட்டு
author img

By

Published : Dec 6, 2020, 9:42 PM IST

திருப்பூர்: விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் கலந்துரையாடல் நிகழ்ச்சி திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட பல்லடம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அருள்புரம் பகுதியில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தோல்வி பயத்தின் காரணமாக ஆதாரம் இல்லை என நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை வழக்கு குறித்து பேசிவருகிறார். நீதிமன்றம் எங்களை விடுதலை செய்துள்ளது. நாங்கள் வாய்தா கேட்டு செல்லவில்லை.

'தோல்வி பயத்தினால் முதலமைச்சர் 2ஜி வழக்கு குறித்து பேசிவருகிறார்'- கனிமொழி குற்றச்சாட்டு

திமுகவின் சுற்றுப்பயணத்தின்போது மக்களிடம் இந்த ஆட்சியை அகற்றவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது.

எவ்வித பொருளாதார வளர்ச்சியும் இல்லாததால் 50 விழுக்காட்டுக்கும் அதிகமாக வேலை வாய்ப்பின்மை உருவாகியுள்ளது.

புதிய தொழில் வளர்ச்சி இல்லாததால் வடமாவட்டங்களில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. மேலும், விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு திமுக, அதன் தோழமை கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பார்" என்றார்.

இதையும் படிங்க: 2ஜி வழக்கு: கனிமொழி, ஆ. ராசா மனுக்களை தள்ளுபடி செய்த டெல்லி உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.