திருப்பூர் மாவட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை கட்டுப்படுத்தும் வகையில் துணை கமாண்டர் சிங்காரவேலு தலைமையில் மத்திய அதிவிரைவு படையினர் 120 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூரில் அசாதாரணமான சூழல் நிலவக்கூடிய நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு குமரன் சாலையிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை அதிவிரைவு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
இவர்களோடு மாநகர துணை காவல் ஆணையர் பத்ரிநாராயணன் தலைமையில் மாநகர காவல் துறையினரும் பங்கேற்றனர். அதிவிரைவு படையினர் அணிவகுப்பின் போது கண்ணீர் புகை குண்டுகளை வீசக்கூடிய இரண்டு வாகனங்களும் இருந்தன.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம் தமிழனத்தை அழிக்கும் - இயக்குநர் கெளதமன்!