ETV Bharat / state

திருப்பூர் பேருந்து நிலையத்தில் பெண் படுகொலை; பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி! - tiruppur district crime

Tirupur Bus stand women murder video: திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் கடந்த 1ம் தேதி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் பெண் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 3:51 PM IST

திருப்பூரில் பெண் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

திருப்பூர்: திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் கடந்த 1 ஆம் தேதி இரவு 10 மணி அளவில் நடுத்தர வயது பெண்ணின் தலையில் சராமரியாக கத்தியால் குத்திக் கொலை செய்த நபரை பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தெற்கு காவல் நிலைய போலீசார் பிடித்தனர்.

இதனிடையே பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை பொதுமக்கள் உதவியுடன் ஆட்டோவில் ஏற்றி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார்.

இதையும் படிங்க: தரமில்லாத சாலை.. கைகளால் பெயர்த்தெடுத்த மக்கள்! அதிகாரிகள் 20% கமிஷன் வாங்குவதாக ஊர் மக்கள் குற்றச்சாட்டு!

இதனை தொடர்ந்து பெண்ணை கத்தியால் குத்திய நபரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த கணேசன் (52) என்பது தெரிய வந்தது. டிரைவராக பணியாற்றும் இவர் திருமணமாகாத நிலையில் பழனிக்கு சென்ற போது அங்கு பவளக்கொடி (எ) சாந்தி (48) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து சாந்தியை திருப்பூர் அடுத்த கோவில்வழி பகுதியில் குடியமர்த்திய கணேசன் ஒட்டன்சத்திரத்தில் பணியாற்றியபடி அவ்வப்போது திருப்பூர் வந்து சாந்தியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி திருப்பூர் பேருந்து நிலையத்தில் சாந்தி வேறு ஒரு நபருடன் பேசிக் கொண்டிருந்ததை கண்டதும் ஆத்திரமடைந்த கணேசன் காய்கறி வெட்டும் கத்தியால் சாந்தியின் தலை மற்றும் பின் முதுகு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சாந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அசாமில் மசூதியில் வைத்து இமாம் படுகொலை... போலீசார் தீவிர விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.