திருப்பூர் மாவட்டத்தில் வாடகை கார் தொழிலை நம்பி ஏராளமான ஓட்டுநர்கள் உள்ளனர். ஆனால் சொந்த தேவைக்காகப் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களை, வாடகைக்கு பயன்படுத்தும் நிலை சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. இதனால் வாடகை கார் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு மட்டுமின்றி சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுவருகிறது.
இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு திருப்பூரைச் சேரந்த கருப்பு சாமி என்பவர் தனது சொந்த வாகனத்தில் பயணிகளை வாடகைக்கு ஏற்றிச் சென்றுள்ளார். இது குறித்து வாடகை கார் ஓட்டுநர் சக்திவேல் என்பவரிடம் விசாரித்தபோது, 'இது என்னுடைய கார் நான் யாரை வேண்டுமானாலும் ஏற்றிச் செல்வேன்' என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், வாடகை கார் ஓட்டுநர் சக்திவேலை தாக்கியதோடு, மட்டுமல்லாமல் காரை ஏற்றிக் கொலைசெய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஓட்டுநர் சக்திவேல் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக வாடகை கார் ஓட்டுநர்கள் சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்திவரும் வாகன ஓட்டிகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர்.
இதையும் படிங்க: அரசுப் பள்ளிகளிலும் சிலம்பக் கலை வளர வேண்டும்!