ETV Bharat / entertainment

'சூது கவ்வும் 2' அப்டேட் வந்தாச்சு.. ரிலீஸ் எப்போது? - SOODHU KAVVUM 2 RELEASE DATE

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி உள்ள 'சூது கவ்வும் 2' திரைப்படம் வரும் டிச 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சூது கவ்வும் 2 போஸ்டர்கள்
சூது கவ்வும் 2 போஸ்டர்கள் (Credits - Thirukumaran Entertainment X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2024, 5:43 PM IST

சென்னை : இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், கடந்த 2013ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சூது கவ்வும்'. இப்படத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். புதுமையான திரைக்கதையுடன் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், தற்போது சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கத்தில், தங்கம் சினிமாஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இதில் மிர்ச்சி சிவா, ராதாரவி, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், ஹரிஷா ஜெஸ்டின் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க : 'மண்டைக்கு சூரு ஏறுதே'.. சூது கவ்வும் 2 பாடல் வெளியானது!

சமீபத்தில், இப்படத்திலிருந்து 'மண்டைக்கு சூரு ஏறுதே' எனும் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலை ஏ.ஆர்.ரகுமான் நடத்தும் இசைக் கல்லூரியிலும், லண்டன் டிரினிட்டி கல்லூரியிலும் பயின்ற எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்திருந்தார்.

'சூது கவ்வும்' வெளியாகி 11 ஆண்டுகள் கழித்து, இரண்டாம் பாகமான 'சூது கவ்வும் 2' தயாராகி உள்ளது. 'சூது கவ்வும்' திரைப்படத்தின் முறையான இரண்டாம் பாகமாகவும், நகைச்சுவை மற்றும் ஆக்சன் கலந்த திரைப்படமாகவும் 'சூது கவ்வும் 2' இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படம் வரும் டிச 13ம் தேதி வெளியாகும் என வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.