பிப்ரவரி 10-ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரமர் மோடி தமிழகம் வருகிறார். இந்நிலையில் அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பெரியாரிய இயக்கங்களின் சார்பில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. தந்தை பெரியார் திராவிடர் விடுதலை கழக பொதுச் செயலாளர் ராமகிருட்டிணன் தலைமையில், நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராமகிருட்டிணன், " மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பிப்ரவரி 10-ம் தேதி திட்டமிட்டபடி கருப்புக்கொடி காட்டப்படும்" என்றார்.
மேலும் பேசிய அவர், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கூட்டம் நடைபெற உள்ள இடத்திற்கு ஊர்வலமாக செல்ல திட்டமிட்டுள்ளோம். போலீஸ் அனுமதி மறுத்தால் தடையை மீறி செல்லவும் முடிவு செய்துள்ளோம். குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் திருப்பூரில் தற்போது தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் உள்ளது. இந்த நேரத்தில் பிரதமர் மோடி திருப்பூர் வருவதை மக்கள் விரும்ப மாட்டார்கள். மேலும், மோடி அறிவித்த திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 18 எய்ம்ஸ் மருத்துவமனைகளும், அறிவிப்பாகவே இன்றளவும் உள்ளது " என்று தெரிவித்தார்.