ETV Bharat / state

தாராபுரத்தில் எல். முருகன் வேட்பு மனுத்தாக்கல்!

திருப்பூர்: தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிடும் மாநில தலைவர் எல். முருகன் இன்று (மார்ச்18) வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

தாராபுரத்தில் எல். முருகன் வேட்பு மனுத்தாக்குதல்!

author img

By

Published : Mar 18, 2021, 2:34 PM IST

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் தனது வேட்பு மனுவை இன்று (மார்ச் 18) தாக்கல் செய்தார். தாராபுரம் சார் ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது, அதிமுக மடத்துக்குளம் சட்டப்பேரவை வேட்பாளர் மகேந்திரன், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக, தாராபுரம் பேருந்து நிலையம் அருகே இருக்கக் கூடிய பாஜக பணிமனை முதல், சார் ஆட்சியர் அலுவலகம் வரை திறந்த வேனில் ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலத்தில் ஆயிரம் பேர் அளவில் பாஜக, அதிமுக-வை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர். சார் ஆட்சியரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்த பிறகு, அதற்கான வைப்பு தொகை 5 ஆயிரம் ருபாய் செலுத்தப்பட்டது. மக்களிடம் இருந்து வாங்கி , வேட்புமனு வைப்புத்தொகை செலுத்தப்பட்டதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தாராபுரத்தில் எல். முருகன் வேட்பு மனுத்தாக்கல்!

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எல். முருகன், “எங்களுடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. தாராபுரத்தின் வளர்ச்சி, மேம்பாடு ஆகியவை தொடர்பாகத்தான் எங்களது செயல்பாடுகள் இருக்கும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க...ELECTION BREAKING: வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.