ஊரடங்கை அடுத்து, 60 நாள்களாக சவாரியின்றி ஆட்டோ ஓட்டுநர்கள் வீட்டில் முடங்கினர். அதனால் உணவிற்கு அல்லல்படும் நிலை ஏற்பட்டது. அரசு ஊரடங்கை தளர்த்தியதை அடுத்து ஆட்டோ ஓட்டுவதற்கும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியில் 25-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேல் வாடகை ஆட்டோக்களை ஓட்டிவருகின்றனர். இதனிடையே அரசின் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆட்டோக்களை ஓட்ட முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர்.
இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோக்களுடன் வந்து மனு அளித்தனர். வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு அரசு சார்பில் நிவாரண உதவி வழங்க வேண்டும். ஆட்டோவில் ஒரு நபர் மட்டும்தான் ஏற்றிச்செல்ல வேண்டும் என்ற உத்தரவை, மூன்று நபர்களாக உயர்த்தவும் கோரிக்கைவிடுத்தனர்.
இதையும் படிங்க: வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு!