திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் உள்ள கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் பேங்க் ஆப் பரோடா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் முன்புறம் அமைந்துள்ள ஏடிஎம் இயந்திரத்தை சில நாள்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் வாகனத்தில் கயிறு கட்டி இழுத்து, கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷாமிட்டால் உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தன. இந்நிலையில், நேற்றைய தினம் ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் ஏடிஎம் இயந்திரத்தின் உதிரிபாகங்கள் கண்டறியப்பட்டன.
இதனைத் தொடர்ந்து காவலர்கள் நடத்திய விசாரணையில் ஈரோடு பகுதியில் தங்கியிருந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ரபிக், ஷாகித், ஷாஜித், இர்சாத், காசிம் கான் மற்றும் ராகுல் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 69,120 ருபாய் பணம், கொள்ளைக்கு பயண்படுத்திய 2 நாட்டு கை துப்பாக்கிகள், 9 தோட்டாக்கள், வெல்டிங் மிஷின், கண்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.
விசாரனையில் நல்லிகவுண்டம்பாளையம் பாலசுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான காரை திருடிச் சென்று மேற்படி கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தியதும் , ஏடிம் இயந்திரத்தை கண்டெய்னர் லாரிக்கு மாற்றி எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது .
இதையும் படிங்க: 'நான் இன்னும் சாகல' - உடற்கூராய்வு சமயத்தில் எழுந்த கர்நாடகவாசி!